BREAKING NEWS

ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி.

ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி.

ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறிந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணத்தை சேர்ந்த 30 வயதான வாலிபர் ஒருவருக்கு வாடஸ் அப்பில ஆண்லைனில் வேலை என்று குறுந்தகவல் வந்துள்ளது. அதனை ஓபன் செய்த அவருக்கு முதலில் குறிப்பிட்ட வேலை செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் முதலில் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. உடனே அவர் குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளார்.

இதையடுத்து அவருககு பணிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் செய்ய பணிக்கான தொகை அவருடைய கணக்கிற்கு வரவில்லை. இதுகுறித்து அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் கெட்டபோது, உங்களுக்கு கொடுக்கக்கூடிய டாஸ்கை தொடர்ந்து முழுவதையும் முடித்தால் தான் உங்களுக்கு பணம் வரும் என்று கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை,

இதனால் தொடர்ந்து அந்த வாலிபர் தன்னுடைய 2 வங்கி கணக்குகளில் இருந்தும் பலமுறை மரம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிறகு ரூ.5லட்சத்து 35 ஆயிரத்து 499 -யை செலுத்தியுள்ளார். ஆனால் ஆனால் அவருக்கு எந்தவிதத்திலும் பணம் வந்து சேரவில்லை பணம் வராதது குறித்து பலமுறை கேட்டபோதும் கொடுத்த பணியை முழுவதும் முடித்தால் தான் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

இவ்வாறு தொடர்ந்து பணி செய்தும் பணம் வராததால் அதிரச்சி அடைந்த வாலிபர் தான ஏமாற்றப்பட்டதை அறிந்தார் பின்னர் இதுகுறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காரத்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )