BREAKING NEWS

உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பழைய பேருந்து நிலையத்தில் உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் மாவட்டத்தில் சிறந்து விளங்கிய சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

 

 

உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட உலக அமைதிக் குழுவின் சார்பாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேரு சிலை வழியாக திட்டசாலையில் உள்ள தனியார் மஹால் வரை ஊர்வலமாக சென்றனர்.

 

 

இந்த அமைதி ஊர்வலத்தை தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

 

 

இந்த ஊர்வலத்தில் தேனி மாவட்ட உலக அமைதி குழு ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி தலைமையிலும் பொதுச்செயலாளர் ஜெயபாலன் முன்னிலையிலும் அமைதி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக வெள்ளை கொடியேந்தி ஏராளமானோர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

 

 

பின்னர் தேனி திட்ட சாலையில் உள்ள தனியார் மஹாலில் தேனி மாவட்ட அளவில் சிறந்த சேவை செய்தவர்களை பாராட்டி சிறந்த சமூக சேவகர் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நபர்களுக்கு தேனி மாவட்ட உலக அமைதி குழுவின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

 

 

இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை,தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட உலக அமைதி குழு தலைவர் ராஜகுரு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகவும்,

 

 

தேனி மாவட்ட உலக அமைதி குழு ஆலோசகர்கள் வினோபா மற்றும் சர்ஜில் துரை மற்றும் தேனி மாவட்ட உலக அமைதி குழு உறுப்பினர்கள் ரமேஷ், சுந்தர் ,சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )