BREAKING NEWS

கோவில்பட்டி அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி அருகே பறவைகளை  வேட்டையாடிய 2 பேர் கைது  அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் காட்டு பகுதியில் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த   முருகனும் அசோக் ஆகிய இருவரும் கௌதாரி பறவையை துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையெடுத்து குளத்தூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதியில் சென்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது, முருகன், மற்றும் அசோக் இருவரும் துப்பாக்கியினால் சுட்டு கௌதாரிகளை கொன்று காரில் கொண்டு செல்வது தெரியவந்தது. 

இதையெடுத்து முருகன் , அசோக் இருவரையும் குளத்தூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2துப்பாக்கி,  சுடப்பட்ட 7 கௌதாரிகள் ஆகியவறை பறிமுதல் செய்து விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  இருவருக்கும் 25, 000 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும்,அந்த தொகையை கட்டிவிட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )