BREAKING NEWS

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழா – வெகு விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழா – வெகு விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


விழாவின் 9-வது நாளான இன்று காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

இதையொட்டி அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு,திருவனந்தல் பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேர் 4 ரதவீதிகளை சுற்றி நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. வரும் 15ந்தேதி நடைபெறும் திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

CATEGORIES
TAGS