உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ எம் ஏ அரங்கில் நடந்தது.

முன்னாள் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார் டிஸ்ட்ரிக்ட் ஜெனரல் செகரட்டரி வரதராஜ் டிஸ்ட்ரிக்ட் கோ ஆர்டினேட்டர் ஆர். பி.ராஜ் ரீஜினல் கோ ஆர்டினேட்டர் யூ கே பி எம் கார்த்திகேயன் உதவி கவர்னர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் கவர்னர் இளங்குமரன் சிறப்பு அழைப்பாளராக ராக கோவை விஜிஎம் மருத்துவமனை சேர்மன் டாக்டர் மோகன் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தலைவராக சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம் செயலாளராக ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய தலைவர் சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம் ஏற்புரையாற்றினார். முன்னாள் தலைவர் பொறியாளர் பாலமுருகன் செயலாளர் கே ஆர் எஸ் செல்வராஜ் ஆகியோர் ரோட்டரி சங்கம் ஆற்றிய சமூகப் பணியில் குறித்து பேசினர்.
டிஸ்ட்ரிக்ட் கவர்னர் இளங்குமரன் உலக அளவில் ரோட்டரி சங்கம் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் ரோட்டரி சேவைகள் குறித்தும் பேசினார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
