காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்.

சிவகங்கை மாவட்டம் நாளுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளைமுன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேட போட்டி ஓவிய போட்டி பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் முதல் பரிசை இரண்டாம் வகுப்பு மாணவன் சுதீர்மாறன் ,வழங்கப்பட்டது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை, தமிழ்ச்செல்வி , ஆசிரியர்கள் பாப்பா வெள்ளத்தாய் ,பஞ்சுராஜ், லட்சுமி, ஜெகதாம்பிகை, பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பின்பு இதைத்தொடர்ந்து காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் என்று அனைத்து மாணவ மாணவிகளும் போட்டியில் கலந்துகொண்டு காமராஜரின் ஆடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தனர்.
