BREAKING NEWS

5 தலைமுறையாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் நூலகம் உள்ளிட்டவற்றை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு.

5 தலைமுறையாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் நூலகம் உள்ளிட்டவற்றை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் படூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நூலகம் கழிப்பறை சமுதாயக்கூடம் ஆகியவற்றை இடிக்கவும் விவசாயிகள் பயன்படுத்தும் மற்றும் ஈமச்சடங்கு செய்ய செல்லும் சாலையை மூடவும் கிராம மக்களுக்கு எதிராக தனிநபர் நீதிமன்ற உத்தரவினை பெற்று வருவாய்த்துறை மூலமாக கட்டிடங்களையும் சாலையையும் எடுக்க நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிராக கிராமத்தினர் ஒன்று கூடி வருவாய்த் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி முரளி கூறுகையில் படூர் கிராமத்தில் 5 தலைமுறைக்கு மேலாக பொதுமக்கள் சமுதாயக்கூடம் நூலகம் பொதுக்கழிப்பிடம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர் மேலும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கு சென்று வரும் பாதையாகவும் இறந்தவரின் உடலை கொண்டு செல்லவும் ஈம சடங்குகள் செல்லவும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு மாறாக தனி நபர் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாகத்திற்கும் எதிராக நீதிமன்ற மூலம் கட்டிடங்களை இடிப்பதற்கும் பாதையை அபகரிப்பதற்கும் உத்தரவை பெற்றுள்ளார் ஆனால் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கும் அல்லது பொது மக்களுக்கும் தெரிவிக்காமல் திடீரென காவல்துறை மற்றும் வருவாய் துறையின் உதவியுடன் மக்களின் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை இடிக்க வந்தனர் இதற்கு ஊராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது,

மேலும் மக்களின் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை அகற்றுவதை வருவாய்த்துறையினர் நிறுத்த வேண்டும் எனவும் ஊராட்சி மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரி C3வித்தார். No மேலும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் திரும்பிச் சென்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )