BREAKING NEWS

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள பெரிய புலியூர் ஊராட்சி 3-வார்டு இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள பெரிய புலியூர் ஊராட்சி 3-வார்டு இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

கடந்த 9-ம் தேதி நடந்த தேர்தலில் 501 மொத்த வாக்குகளில் 345 வாக்குகள் பதிவாகியது. பதிவாகிய வாக்குப்பெட்டி பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இன்று காலை தேர்தல் மேற்பார்வையாளர் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம். விஜய ராஜ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் நா.மாரிமுத்து மேற்பார்வையில் நான்கு வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டி திறக்கப்பட்டு வாக்குகள் என்னப்பட்டது. என்னப்பட்ட வாக்குகளில் 6 செல்லாத வாக்குகளும், தியாகராஜன் 39, குப்புசாமி 116, கலாவதி 51 மூர்த்தி அதிக படியாக 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மூர்த்தி சுயேச்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டு 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து மூர்த்திக்கு தேர்தல் மேற்பார்வையாளர் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) எம். விஜய ராஜ்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் நா. மாரிமுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.

கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )