கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் துணைத் தலைவர் நடவடிக்கையால் எந்த நலத்திட்ட பணிகளும் நிலக்கோட்டையில் நடத்தப்படவில்லை

நிலக்கோட்டை செய்திகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் இந்த ஆறு மாதங்களாக 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது.
தலைவர் துணைத் தலைவர் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் இந்நிலையில் துணைத்தலைவரின் நடவடிக்கையால் எந்த ஒரு நலத்திட்ட பணிகளும் நிலக்கோட்டையில் நடத்தப்படவில்லை எனவும் மேலும் தகாத வார்த்தைகளாக பேசுவதாகவும் கூறி இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் வருகை பதிவேட்டில் கூட கையெழுத்து போடாமல் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களிடம் கேட்டபோது எந்த ஒரு பணியினையும்செய்ய விடாமல் துணைத் தலைவர் தடுப்பதாகவும் வருபவர்கள் காபி மற்றும் சாப்பிட்டு விட்டு நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டு எந்த கேள்வியும் கேட்காமல் செல்ல வேண்டும் எனவும் தரக்குறைவாக பேசுவதாகவும் கூறினார்கள் இதனால் நிலக்கோட்டையில் பணிகள் சிறப்புற நடைபெறுமா என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
