கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சியில் 25 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா.

கும்பகோணம் தொகுதி சாக்கோட்டை ஊராட்சி கரூப்பூர் கிராமம் கோசிமணி நகரில் 25 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 25 குடும்பத்தினர் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி எம்எல்ஏ., க.அன்பழகனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து எம்எல்ஏ., க.அன்பழகன் ஜமாபந்தியில் சாக்கோட்டை ஊராட்சி கோ.சி.மணி நகரில் 25 பேருக்கு பட்டா வழங்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பட்டா மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று (30ம்தேதி) கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சி கரூப்பூர் கிராமம் கோ.சி.மணி நகரில் பொதுமக்களிடம் நேரில் பட்டா வழங்கும் விழா நடந்தது. எம்எல்ஏ., க.அன்பழகன் தலைமை வகித்தார். தஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்து ஜமாபந்தியில் வழங்கிய மனுக்களின் அடிப்படையில் 25 பேருக்கு நேரடியாக பட்டா வழங்கினார்.
இவ்விழாவில் தாசில்தார் தங்க.பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தி.கணேசன், பெருமாண்டி ஊராட்சி தலைவர் ஆர்.கே.பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன், ஊராட்சித் தலைவர் அ.செல்லப்பன் மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
