BREAKING NEWS

கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர்.

கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர்.

கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர் குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளி. இவர் ஆன்லைனில் தொடந்து 4 முறை பொருட்கள் வாங்கியுள்ளார். பின்னர் இவரது வீட்டுக்கு பொருட்கள் வாங்கிய நிறுவனத்தின் பெயரில் இருந்து தபால் வந்துள்ளது. அதில் பரிசு தொகைக்கான கூப்பன் (ஸ்கிராட்ச் கார்டு) இருந்துள்ளது. பரிசு தொகை வென்றால் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு பரிசு தொகையை பெற்று கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து அந்த கார்டை விஜயகுமார் சுரண்டு பார்த்துள்ளார். அதில் ரூ.7.50 லட்சம் பரிசு தொகை வென்றுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. தொடர்ந்து அந்த தொழிலாளி தபாலில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அதில் பேசிய மர்மநபர் பரிசு தொகைகைய பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் முதல் தவணைத் தொகையை விஜயகுமார் செலுத்தி உள்ளார்.

மீண்டும் விஜயக்குமாரை தொடர்பு கொண்ட அந்த மர்மநபர் மேலும் பணம் செலுத்தினால்தான் பரிசுத் தொகை கிடைக்கும். காரணம் நாணயம் வடிவில் (பிட்காயின்) பரிசுத் தொகையை உள்ளது என்று தெரிவிக்கவே தனது மனைவியின் நகை மற்றும் தனது குழந்தைகள் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து மீண்டும் பணம் செலுத்தி உள்ளார். பின்னர் பரிசு தொகைக்காக பரிசோதனை செய்ய தங்கள் நிறுவனத்தில் இருந்து ஆட்கள் வரவேண்டியது இருக்கும், அல்லது நீங்கள் வெளிநாட்டிற்கு வர வேண்டும். அதனால் டிக்கெட்டுக்கான அனுப்ப மர்ம நபர் தெரிவிக்கவே இதை உண்மை என்று நம்பிய விஜயக்குமார் மீண்டும் ஒரு தொகையை அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இப்படியே விஜயக்குமாரிடம் இருந்து அந்த மர்மநபர் ரூ.5.67 லட்சத்தை மோசடியாக பெற்றுள்ளார்.
ஆனாலும் பரிசுத் தொகை வராததால் சந்தேகமடைந்த விஜயகுமார் அந்த மர்மநபருக்கு செல்போனில் தொடர்புகொண்டார். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயக்குமார் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை என கூறி ஆன்லைனில் பல போலியான பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்டவாறு பணம் செலுத்தி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் உங்களது வங்கி விபரங்கள், ஏ.டி.எம் கார்டு விவரங்களை யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் வங்கியில் இருந்து உங்களுக்கு இது போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை. அப்படி யாரேனும் கேட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதே போல் உங்களது செல்போன் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளது. இதற்காக முன் பணம் கட்ட வேண்டும் எனக்கூறி குறுந்தகவல் வந்தாலும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )