BREAKING NEWS

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்.

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் திருக்களாச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் அவர் கூறும்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் வருகை குறித்தும் அடுத்த மாதம் 3 -ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட பல்வேறு திட்டங்களை செய்வதற்கான ஆலோசனையை வழங்கினார்.

கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஜெயராமன், அமுர்த.விஜயகுமார், ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகண சங்கரி குமரவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் துளசிரேகா ரமேஷ், ராபியா நர்கீஸ் பானு அப்துல்மாலிக், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய கழக நிர்வாகிகள் மணிமாறன், மாவட்ட கழக பிரதிநிதிகள் இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன்,ஆனந்தன், ஒன்றிய பொருளாளர் கருணாநிதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )