தலைப்பு செய்திகள்
தூத்துக்குடியில் சிங்கம் பட பாணியில் ரூ.30 கோடி போதைப்பொருள் கடத்தல்..8 பேரை தட்டி தூக்கிய போலீஸ்
தூத்துக்குடி: கடல்வழியே அண்டை நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் போதைப்பொருளை கடத்த முயன்ற 8 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ. 30 கோடி மதிப்புள்ள சரக்குகளை பறிமுதல் செய்தனர்.
தற்போது அந்த சம்பவங்கள் உண்மையாகவே நடைபெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடலில் மிதந்ததை எடுத்து பதுக்கி வைத்து விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓராண்டுக்கு முன்பு மினிக்காய் தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் மிதந்து வந்த பார்சலை எடுத்த சிலர் அதன் மதிப்பு தெரியாமல் கடந்த ஒன்றரை மாதத்தில் 7 கிலோ விற்பனை செய்துள்ளார். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடிமாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையும் கடத்தலும் அதிகரித்து வருகிறது. அதை மையமாக வைத்து சிங்கம் 2 திரைப்படம் எடுக்கப்பட்டது சூர்யா நடித்த இந்த படத்தில் கப்பல், படகு மூலம் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்வார் சூர்யா.
காவல்துறையினர் சோதனை இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
8 பேர் கைது இதுதொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் விற்பனை தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும் விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை 55 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளதோடு கடத்தி விற்பனை செய்பவர்களையும் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதே போல போதை பொருள் விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
CATEGORIES தூத்துக்குடி