BREAKING NEWS

திசையன்விளையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 99வது பிறந்த நாள் விழா. கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

திசையன்விளையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 99வது பிறந்த நாள் விழா. கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருநெல்வேலி மாவட்டம்
திசையன்விளை யில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திசையன்விளை நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 99வது பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் வக்கீல் ஜாண் கென்னடி தலைமை யில் கொண்டாடப்பட்டது. கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அடுத்து பழைய பேருந்து நிலையம் அருகில் கட்சி கொடியேற்றி கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் ஜாண் ரபீந்தர் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் 50பேர்களுக்கு வேட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் மணலிவிளையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பெண்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அடுத்து திசையன்விளை பயணிகள் விடுதி முன்பு தி.மு.க. கொடியை நகரச் செயலாளர் வக்கீல் ஜாண் கென்னடி ஏற்றி வைத்தார். பின்னர் பெட்டைக்குளத்தில் கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது. நெல்லை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஜாண் ரபீந்தர், துணை அமைப்பாளர் பெட்டைக்குளம் முருகன், உறுமன்குளம் நாராயணன் ஆகியோர் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வேட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தி.மு.க.பிரமுகர்கள் கள்ளிகுளம் ரோச், தனராஜ் சாமுவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், நகர விவசாய அணி செயலாளர் கிங் ஸ்டார் சேர்மத்துரை,ஒன்றிய கவுன்சிலர் பிரேமா,அன்பழகன், கேசவன்,பெருங்குளம் பிரகாசம், நவநீதகிருஷ்ணன், எஸ்.கே.செளந்தர்,ஐஸ்வர்யா,பாலமுருகன், சுவீகர்,நசிருதீன்,வக்கீல் கனிஷ்கர்,மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )