BREAKING NEWS

பொறையார் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் அலுவலக அதிகாரப்பூர்வ வருகை.

பொறையார் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் அலுவலக அதிகாரப்பூர்வ வருகை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையார் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் செல்வநாதன் அதிகாரப்பூர்வ வருகை புரிந்திருந்தார்.

 

தரங்கம்பாடி தனியார் அரங்கில் அறிமுக கூட்டம் மற்றும் சாத்தங்குடி கிருபாலய மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி பொறையார் ரோட்டரி சங்கத் தலைவர் சக்தி மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

 

 

பொறையார் ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை ஆளுநர் ரவி ஆளுநர் செல்வநாதனை பற்றிய அறிமுக உரையாற்றினார்.

 

நிகழ்ச்சியில் மருத்துவர் பார்வதி சந்திரசேகருக்கு மருத்துவத்துறையில் 50 ஆண்டுகளாக சேவை புரிந்து வருவதை போற்றும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதில், பொறையார் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )