சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விருப்ப மனு

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கி வருகின்றனர்.
அதன்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி மாநில துணைச் செயலாளருமான வி.எம். ராஜலெட்சுமி முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான கோகுல இந்திராவிடம் விருப்ப மனுவை வழங்கினார்.
அப்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம் எல் ஏ, முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்பையா பாண்டியன், ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட அவைத் தலைவர் வி. பி. மூர்த்தி, மாநில எம் ஜி ஆர் மன்றத் துணைச் செயலாளர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நெல்லை மண்டல செயலாளர் சிவானந்த், மாவட்ட பொருளாளர் சண்முகையா, விவசாய அணி செயலாளர் பரம குருநாதன், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், முத்துப்பாண்டி, செல்வராஜ், தலைமைக் கழக பேச்சாளர்கள் தீக்கனல் லட்சுமணன், ராமசுப்பிரமணியன், இலக்கிய அணி தலைவர் பிஜிபி ராமநாதன், வக்கீல்கள் இராமேஸ்வரன், கணேசன், ராம்குமார், வேல்முருகன், பஞ்சாயத்து தலைவர் பிச்சை பாண்டி, நகரப் பேரவை செயலாளர் சௌந்தர் என்ற சாகுல் ஹமீது,
நகர் மன்ற உறுப்பினர்கள் பரமசிவன், மாரிசாமி, ராமதுரை, ராஜேஸ்வரி, முத்து லட்சுமி, தமிழ்ச்செல்வன்,முன்னாள் கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், கணேசன், சின்னராஜ்,உமா மகேஸ்வரன், நிர்வாகிகள் ஆர்.சி மாரியப்பன், தங்கம், அந்தோணி டேனியல், கந்தன், முத்து மணிகண்டன், சுந்தரபாண்டியன், பாலமுருகன், நவீன் ராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் நிர்மலா தேவி, செந்தமிழ்ச்செல்வி, மாரியம்மாள், ராமலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
