சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.

இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று காலை சங்கர நாராயணசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு சங்கரநாராயணசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதணைகள் நடைபெற்றது.
மேலும் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சாமி சன்னதி, கோமதி அம்மன் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகிய சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
