BREAKING NEWS

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா! 

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா! 

வேலூர் மாவட்டம் ,வேலூர் வட்டம், கணியம்பாடி ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கணியம்பாடியில் சாலையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆலயம்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீப தூப ஆராதனைகள் வெகு விமரிசையாக நடந்தது. இதை தொடர்ந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது.

இதை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

குறிப்பாக அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழா ஒருங்கே இணைந்து இன்று சீரும் சிறப்புடன் இந்த கோவிலில் நடந்தது குறிப்பிடத்தக்கது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அலங்காரத்தையும் ஸ்ரீ விக்ரம் அர்ச்சகர் செய்திருந்தார்.

CATEGORIES
TAGS