பலகோடி ரூபாய் சொத்து? பல பேருக்கு பினாமியா? வேலூர் வருவாய் துறையில் ஜெகதீஸ்வரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள்! குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா? சீரழியும் வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் என பொதுமக்கள் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்!உரிய நடவடிக்கை எடுப்பாராஎன்று பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக ஆட்சி காலங்களில் தொடர்ந்து 5 வருடங்களுக்கும் மேலாக ரெகுலர் தாசில்தாராக உள்ளூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது வீடு காட்பாடி வி. ஜி. ராவ் நகரில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இவரது மனைவி சுமதி. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏ.டி.யாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் பல்வேறு அரசு இடங்களை ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகரும், மாநகராட்சி 1-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அன்புவிடம் அரசுக்கு சொந்தமான இடத்தை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கல்புதூரிலுள்ள சர்வே எண்: 281/1B 50 சென்ட் இடத்தினை பட்டா போட்டு கடந்த 2016 -17 ஆண்டில் விற்பனை செய்து உள்ளதாகவும் அதுகுறித்து தற்போது பட்டாக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை கையூட்டுப் பெற்றுக் கொண்டு அவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தற்போது வேலூர் மாவட்ட ஆய்வுக் குழுவில் தாசில்தாராகப் பணிபுரிந்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 4-வது வளாகத்தில் மாவட்ட ஆய்வுக்குழு (District Inspection Cell / Committee) என்பது தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்களை ஆய்வு செய்யச் செயல்படும் ஒரு நிர்வாகப் பிரிவாகும். இது மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்குகிறது.
இந்த ஆய்வு குழுவில் தாசில்தாராக இருப்பவர் ஜெகதீஸ்வரன். இவர் காட்பாடியில் ரெகுலர் தாசில்தாராக 3 முறைக்கு மேல் பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தாசில்தார் ஒரு ஆண்டு வரை தான் ரெகுலர் தாசில்தாராகப் பணிபுரிய வேண்டும் என்று அரசு விதி கூறுகிறது. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சொல்படி கேட்டு அரசு புறம்போக்கு நிலங்களை தாரை வார்த்து கொடுத்து இருப்பதால் இவரே தாசில்தாராக நீடிக்க வேண்டும் என்று திமுகவினர் விரும்பி தொடர்ந்து மொத்தம் 5 ஆண்டுகள் காட்பாடியில் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாக வருவாய் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆய்வு குழுவில் தாசில்தாராக இருப்பவர் ஜெகதீஸ்வரன். இவர் காட்பாடியில் ரெகுலர் தாசில்தாராக மூன்று முறைக்கு மேல் பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தாசில்தார் ஒரு ஆண்டு வரை தான் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிய வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சொல்படி கேட்டு அரசு புறம்போக்கு நிலங்களை திமுக பிரமுகர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து இருப்பதால் இவரே தாசில்தாராக பணியில் நீடித்தால் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்று திமுகவினர் விரும்பி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் அவரை அமர்த்தியுள்ளதாக வருவாய் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஜெகதீஸ்வரன் காட்பாடி தாசில்தாராக இருந்தபோது தனக்கு ஒத்து வராத வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர்களை சாதி ரீதியாக பழிவாங்கி தனது அதிகாரத்தை வைத்து டம்மியான இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ததாக இவர் மீது புகார் கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட வர்கள். தாசில்தார் ஜெகதீஸ்வரன் தான் செய்த தில்லுமுல்லுகள் எங்கே வெளியே வந்துவிடும் என்ற அச்சத்தில் தன் சொல் பேச்சை கேட்க கூடிய மகேஸ்வரியை ரெகுலர் தாசில்தாராக கொண்டு வந்து பணியில் அமர்த்திவிட்டார் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்தவர்கள்.

தாசில்தார் ஜெகதீஸ்வரன் தனது அதிகாரத்தை மீறியும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் திடீர் ஆய்வு செய்தால் உறவினர்களையே தனக்கு பினாமிகளாக ஆக்கி அவர்கள் மீது சுமார் 15 வீடுகளுக்கும் மேலாக வாரி குவித்து பதிவு செய்து வைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது மட்டுமின்றி பல அதிர்ச்சி உண்மைகள் வெளியே வரும் என்கிறது வருவாய்த்துறை வட்டாரம்.
இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்தபோது காட்பாடி தாசில்தாராக கடந்த 2016- 17 அவர் பிரம்மபுரம் மனோ என்ற புரோக்கர் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபராக வலம் வந்த குணாளன் உள்ளிட்டோரிடம் இணக்கமாக இருந்து கொண்டு சொத்துக்களை வாங்கி குவித்தார். அப்போதுதான் வேலூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் அன்புவிடம் பழக்கம் ஏற்பட்டு அரசு இடங்களை பட்டா போட்டு கொடுத்தார். மேனுவல் பட்டா போட்டு கொடுத்துவிட்டு திமுக ஆட்சி காலத்தில் பணத்தை வாரி குவித்தார் இந்த ஜெகஜால கில்லாடி ஜெகதீஸ்வரன். ஐந்து ஆண்டுகளில் இவர் வைத்தது தான் சட்டம் என்ற ரீதியில் காலம் உருண்டோடியது. பெண் கிராம நிர்வாக அலுவலர்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்தி கொண்டு காம களியாட்டம் ஆடி வந்தார் இந்த மன்மத ராசா ஜெகதீஸ்வரன் என்று சொன்னால் அது மிகையாகாது. பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவர்களுக்கு வேண்டிய பணம் கொட்டக்கக்கூடிய இடங்களில் பணி அமர்த்திவிட்டு தனக்கு வேண்டப்படாதவர்களை ஆங்காங்கே தூக்கி எறிந்து விட்டு தனது விருப்பம் போல் திமுகவின் உறுதுணையோடு செயல்பட்டு வந்தது இந்த பசுத்தோல் போர்த்திய புலி. குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் எம்.பி. கதிர்ஆனந்த் ஆகியோரின் சொல்படி கேட்டதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்குப்பம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு அவர் கேட்ட இடங்களில் எல்லாம் புறம்போக்கு இடங்களில் பட்டா செய்து வந்தார். இது நாளடைவில் வெளியில் தெரிய வந்து தற்போது இது வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையில் உள்ளது. இதுதான் இப்படி என்றால் இவர் இவருடன் பணிபுரிந்த மண்டல தாசில்தார் மகேஸ்வரி, தலைமையிடத்து தாசில்தார் சிவக்குமார் மற்றொரு மண்டல துணை வட்டாட்சியர் செந்தாமரை உள்ளிட்டவர்கள் மட்டும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு அரசு புறம்போக்கு நிலங்களை, இடங்களை திமுகவினருக்கு தாரை வார்த்து கொடுத்தனர்.
இது நாளடைவில் தெரிய வந்து சார் பதிவாளர் காட்பாடியில் பணியாற்றிய சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்ட து குறிப்பிடத்தக்கது. அப்போது வருவாய்த்துறை மூலம் புறம்போக்கு நிலம் இருப்பதை தற்போதைய வட்டாட்சியர் மகேஸ்வரி மற்றும் இந்த அணிகளை சேர்ந்தவர்கள் தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியவர்கள் மீது இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று பொன்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு மூன்று மாடி குடியிருப்பு கட்ட புறம்போக்கு நிலத்தில் இடம் கொடுத்து பட்டாவும் கொடுத்தார் காட்பாடி வட்டாட்சியர் ஆக இருந்த ஜெகதீஸ்வரன். அதுவும் கோட்டாட்சியராக இருந்த செந்தில் குமார் கைங்கரியத்தோடும
கிராம நிர்வாக அலுவலர்களும் இணைந்து பல லட்சம் கேட்டு ஜெய்சங்கரை தொந்தரவு செய்து வந்தனர். இந்த தகவல் வெளியில் தெரியவர புகார் மேல் புகார் பரவ அந்த பட்டா ஜெய்சங்கரிடமிருந்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோட்டாட்சியராக இருந்து விழுப்புரத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை தனது சொந்த ஊராகக் கொண்ட செந்தில்குமாரை கையில் போட்டுக்கொண்டு ஜெகதீஸ்வரன் ஆடிய ஆட்டத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது ஆட்டம் கச்சிதமாக நடந்து வந்தது. ஜாதி ரீதியாக பலர் பழிவாங்கப்பட்டனர். குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்களை கூறலாம். தனக்கு வேண்டியவர்களை தனக்கு பக்கத்திலேயே கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பாலியல் ரீதியாக விளையாடிக் கொண்டிருந்தார் ஜெகதீஸ்வரன் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இது பலருக்கும் தெரியும். ஒரு அதிகாரி மீது தேவையற்ற புகார்கள் சொல்வதற்கு யாருக்கும் இங்கு விருப்பமில்லை. இருந்தாலும் இது இன்றைக்கும் தெரியவில்லை என்றால் என்றைக்கு தெரிவது என்ற ரீதியில் இந்த தகவல்கள் பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் தெரியும் வகையில் வெளியில் கொண்டு வருவதில் நமது கடமை அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ராகதேவன் இளையராஜாவின் இன்னிசை இரவு கச்சேரியில் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அவரது மகனுடன் தாசில்தார் ஜெகதீஸ்வரன் சமமாக முன் வரிசையில் அமர்ந்து இசை நிகழ்ச்சியை கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு அதிகாரியுடன் இணக்கமாக இருந்து வருகிறார் ஒரு தாசில்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கோட்டாட்சியருக்கு கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து கொடுத்தது இந்த ஜெகதீஸ்வரன் தான் என்று சொன்னால் அதுதான் உண்மை. அரசு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அரசு வாகனங்கள். அவற்றை தனியார் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகின்றார் ஜெகதீஸ்வரன். இவ்வாறு தான் நினைத்தது எல்லாம் சட்டம், தான் இயற்றியது தான் சட்டம், தன்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்பது போல தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் இந்த முகமூடி அணிந்த ஜெகதீஸ்வரன். அவரது முகத்திரை நாளுக்கு நாள் கிழிக்கப்பட்டு வருகிறது. திமுகவினரை கையில் வைத்துக்கொண்டு இவர் ஆடிய ஆட்டங்களுக்கு தற்போது தவெக அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லது விசாரணை வளையத்திற்குள் இவரை கொண்டு வந்து விசாரணை செய்ய வேண்டும். மாவட்ட ஆய்வுக்குழுவில் தாசில்தாராக உள்ள இவர் மீது மாவட்ட ஆய்வு குழு ஒரு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் .இவர் பல்வேறு சீனியர் ஐஏஎஸ்களை காண்பித்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார் என்பது அதிர்ச்சி தகவல்.
இதேபோல் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம். இதுகுறித்த தகவல் அறிந்த விசிக வேலூர் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுடன் அறப்போராட்டம் தொடக்கம். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தரையில் அமர்ந்து சமரசம் பேசினார்.

காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சொரக்கால்பட்டில் அருந்ததியின மக்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் 41 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை ஒரு குடும்பத்தினர் அதாவது தசரதன் என்ற 85 வயது முதியவரின் குடும்பத்தினர் கடந்த நான்கு தலைமுறைகளாக அனுபவித்த வருகின்றனர். இந்நிலையில் சல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி-புஷ்பா என்பவரது மகன் அருண்

போலியாக பத்திரம் பதிவு செய்து வைத்துக் கொண்டு அருந்ததியின மக்களை விரட்டி அடித்து விட்டு ஜேசிபி உதவியுடன் அவர்களது இடத்தில் இருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட பச்சை பனை மரங்களை வெட்டி சாய்த்து அதை அருகில் உள்ள கானாற்றில் கொட்டி பெட்ரோல் ஊற்றி எரியூட்டியுள்ளார்.



ஆனால் பச்சை பன மரங்கள் எரியாமல் அப்படியே ஆங்காங்கே உள்ளது. இதனை கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி அத்துமீறி அரங்கேற்றியுள்ளார் இந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த அருண் என்பவர்.



இவர் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ரியல் எஸ்டேட் மாஃபியாவான அருண் மீது அப்போதைய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய தற்போது சேவூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் நிவேதா குமாரி என்பவர் எவ்வித புகார் அறிக்கையும் சமர்ப்பிக்காமல் சென்று விட்டார்.

அதிலும் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ரெட்டியார் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவருக்கு பட்டா போட்டு கொடுத்தும், அத்துடன் அந்த இடமும் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதாக அருந்ததியின மக்கள் கொதிக்க தொடங்கினர்.
இது குறித்த தகவல் அறிந்த வேலூர் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலிப் மற்றும் காட்பாடி 1வது பகுதி செயலாளர் ராஜ்குமார் மற்றும் காட்பாடி முன்னாள் பொறுப்பாளர் முனுசாமி மற்றும் சிலர் சம்பவ இடமான சொரக்கால்பட்டிற்கு 23 09.2025 ஆம் தேதி காலை 11 மணிக்கு வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தசரதன் மற்றும் அவரது உறவினர்ஙள் அந்த இடத்தில் தங்களை சேர விடாமல் விரட்டியடிக்கும் அருண் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலிப்பிடம் நடந்தவைகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார் தசரதன். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படுகிறது என்றும், இது போன்ற பாமர மக்களின் துயர் துடைக்க ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று அவர்களிடம் விளக்கம் அளித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு தனது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கனிவாக பேசி நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .அப்படி நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதே இடத்தில் அறப்போராட்டத்தை தொடங்கி நாள் முழுவதும் அதே இடத்தில் தங்குவதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்பதை அரசு அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார் பிலிப். இதையடுத்து காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் வரும் வரையில் போராட்டம் தொடரும் என்று பிலிப் அறிவித்தார். இதையடுத்து பல்வேறு காரணங்களை கூறிப் பார்த்து வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திற்கு வராமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அவர் நினைத்தவாறு நடக்கவில்லை. நிலைமை மோசமாவதை அறிந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாமர மக்களுக்கு குரல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலிப் முன்பு தரையில் அமர்ந்து சமரசம் பேசினார்.
இதையடுத்து அந்த அறப்போராட்டம் முடிவுக்கு வந்தது. அனைத்து விஷயங்களும் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பேசி இன்று 24 .9. 25 முற்பகல் 11 மணியளவில் அனைவரும் ஒன்று கூடி பேசி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து விசிக மாவட்ட செயலாளர் ஃபிலிப் தனது அறப்போராட்டத்தை கைவிட்டார். அதை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையில் இருந்த அந்த பகுதியில் மீண்டும் அமைதி நிலவ ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து பனை மரங்களை வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த அருண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவுக்கு உத்தர விட்டுவிட்டு வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் அங்கிருந்து புறப்பட்டார் .இதை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த தகவல் காட்டு தீ போல் அதிகாரிகள் இடையே பரவி வருகிறது. தன்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது, எதுவும் விசாரிக்க கூடாது என்ற ரீதியில் தனக்கு நிகர் தான் தான் என்று செயல்பட்டு வருகிறார். ஏன் மாவட்ட ஆட்சியரை இவர் மதிப்பதே கிடையாது. அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற ரீதியில் இவர் பணியாற்றி வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டு மனைவிகள் உள்ள கணவன் இறந்தால் அவர்களுக்கு வாரிசு சான்றிதழ் தர முடியாது என்று சொன்ன ஜெகதீஸ்வரன் கிராம நிர்வாக அலுவலர், நிவேதா குமாரி கேட்ட சான்றிதழ்களை வாரி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கையூட்டுப் பெற்றுக் கொண்டு இந்த தாசில்தார் பல சான்றிதழ்களை வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பெருமாள் என்பவரிடம் உள்ள லாகினை வைத்துக்கொண்டு பல சான்றிதழ்கள் வாரிசு சான்றிதழ்கள் முரண்பாடாக வழங்கப்பட்டுள்ளது. பெருமாளிடம் ‘ப ‘வைட்டமின் கொடுத்து விட்டு குறித்து பல பணிகளை தாசில்தார் முடித்துக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று கரிகிரியில் 16 பேருக்கு துணை மேயர் சுனில் குமார் சொன்ன நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டா வாங்கி கொடுத்துள்ளார் தாசில்தார் ஜெகதீஸ்வரன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்கள் என்னென்ன வழக்குகள் பதிவு செய்தனர் என்பது இறைவனுக்கே வெளிச்சம். தமிழகம் முழுவதும் மொட்டை பெட்டிஷன் வந்தால் கூட அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார். அதையே தமிழக வெற்றிக்கழகமும் வலியுறுத்தியுள்ளது. புகார் வந்தால் அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை. தமிழகத்திலேயே குறைந்த வழக்குகளை பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் என்றால் அது வேலூர் மாவட்டத்தையே சாரும். ஏனென்றால் இவர்கள் மாமூல் வாங்கிக் கொண்டு செல்வதாக இவர்கள் மீது பலர் புகார் கூறுகின்றனர்.
இதை சொல்வதற்கு நா கூசுகின்றது. இவர்கள் புகார் கொடுத்தாலும் அதன் மீது விசாரணை நடத்துவது கிடையாது. அலட்சியப் போக்கில் செயல்படுகின்றனர். டிஎஸ்பி சங்கர் அலுவலகத்துக்கு வருவதே கிடையாது. வழக்கு பதிவு செய்வதில் குறிப்பாக கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இவர்கள் தயாராக இல்லை. ஆதலால் ஆய்வாளர் மைதிலி மற்றும் டிஎஸ்பி சங்கர் ஆகியோரை வேறெங்காவது பணியிட மாற்றம் செய்துவிட்டு பொறுப்புடன் பணியாற்றும் அதிகாரிகளை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், லஞ்சத்தால் பாதிக்கப்படுபவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். விஜயலட்சுமி என்று திண்டுக்கல்லை சேர்ந்த சர்வேயர் காட்பாடியில் பணிபுரிந்தார். இதையடுத்து அவர் கே. வி. குப்பம், குடியாத்தம் மீண்டும் காட்பாடி திருவலத்திற்கு பணியிட மாற்றத்தில் வந்து விட்டார். இவர் காட்பாடியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு வேண்டியவர்களுக்கு வேண்டிய இடங்களை வாங்கி தரும் வேலையிலும் தாசில்தார் ஜெகதீஸ்வரன் செயல்பட்டு வருகிறார். முறைகேடு செய்பவர் மீது உரிய விசாரணை நடத்தி அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. தமிழகத்திலேயே பெரிய பண முதலை ஜெகதீஸ்வரன் என்று சொன்னால் அது நிதர்சன உண்மையாகும். அது விசாரணை நடந்தால் மட்டுமே வெளி உலகத்திற்கு தெரிய வரும். எங்கு வேண்டுமானாலும் என்னை பற்றி புகார் சொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை யாராலும் மாற்ற முடியாது. அசைக்க முடியாது என்று கொக்கரிக்கிறார் இந்த ஜெகதீஸ்வரன். திமுக ஆட்சி நிறைவு பெற்று தவெக ஆட்சி அமைந்தும் ஜெகதீஸ்வரன் பழைய நினைவு மாறாமல் திமுகவிற்கு விசுவாசமாக அரசு விதியை மீறி இவருக்கு ஐந்து ஆண்டுகள் தாசில்தாராக பணியாற்ற வழிவகை செய்து கொடுக்க உயர் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
தீபாவளி ,பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் கவர் மற்றும் பட்டாசு இனிப்புகள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலா ரூபாய் 2000 கவர் மற்றும் பட்டாசு இனிப்புகள், பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சேலை ரூபாய் 2000 பட்டாசு இனிப்புகள் வழங்கப்பட்டது .கிராம உதவியாளர்களுக்கு ரூபாய் 1000 பட்டாசு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்வாறு ஓராண்டுக்கு இரண்டு முறை இது போன்ற இலவசங்களை தமிழகத்தில் எந்த ஒரு அலுவலகத்திலும் வழங்கி இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வழங்கியிருக்கிறார் என்றால் இவர் எவ்வளவு லஞ்சத்தை வாங்கி குவித்து இருப்பார் என்பதை கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதையெல்லாம் பார்க்க முடியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது போல இருக்கிறது .அவர்களது குறட்டை என்று நிற்கிறது, எப்போது விழிப்பார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .இப்படி செல்லும் இடமெல்லாம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் என்று வாரி குவித்துள்ளதான் இந்த ஜெகதீஸ்வரனின் சாதனையாகும். வண்டறந்தாங்கலில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் நான் போலீஸ் என்று மிரட்டி லஞ்சத்தை வாரி குவித்து வருகிறார். எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என்றால் ஒரு வேலை கூட நடக்காது .இவரை போன்று மெட்டுக்குலத்தைச் சேர்ந்த ரேகா தற்போது கரிகிரியில் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். அவரும் அதேதான் அதே பாணியை கடைப்பிடிக்கிறார் .இதே போன்று கண்டிபேடில் பணியாற்றும் கலாவதி, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாரா படவேடு போன்ற நகரின் மையப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள
பி. வில்லேஜ் முடித்து மூன்றாண்டுகள் ஆன பிறகு தான் ஏ வில்லேஜ்க்கு பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் விதிகளை தளர்த்தி இவரது விருப்பம் போல் இவருக்கு யார் வருமானத்தை தருகிறார்களோ அவர்களை பணியாற்ற கோட்டாட்சியரை கையில் போட்டுக்கொண்டு இவர் கொடுக்கும் பட்டியலை அவர் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்ட வண்ணம் இருந்தார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.



ஆதலால் இதற்கு முன்னர் கோட்டாட்சியராக இருந்த செந்தில்குமார் மீது விசாரணை நடத்தி உண்மையை உலகிற்கு தெரிய வைக்க வேண்டும் என்று வருவாய்த்துறையில் உள்ளவர்களே விரும்புகின்றனர். இப்படி பல கதைகளை நாம் சொல்லிக் கொண்டே செல்லலாம். அரசு புறம்போக்கு இடங்கள் இன்று மாளிகைகளாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு சொத்துக்களை பட்டா போட்டு கொடுக்க இவர்கள் யார் ?என்று தெரியவில்லை .குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் அதிகாரிகள் தங்குவதற்கு வேலூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் காட்பாடியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒரு நாளைக்கு ரூபாய் 5000 வாடகை செலுத்தி தங்குவதற்கு அமர்த்தி தருகிறார் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரியின் கணவர் ஜெகன். இவர் ஐடிசியில் பணிபுரிகிறார் இவரது துணையுடன் இந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாசில்தார் ஜெகதீஸ்வரன் மீது அடுக்கிக் கொண்டே போகலாம் புகார்களை. இதை இத்துடன் மட்டுமல்ல இன்னும் வெளிவராத தகவல்கள் அடுத்த தொடர்ச்சியில் நாம் மீண்டும் படித்து தெரிந்து கொள்ளலாம். நாம் நமக்கு கிடைத்த தகவலை சொல்லிவிட்டோம். முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? எப்படி சாட்டையை சுழற்றுகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் “
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
