அஜித்-ரஜினி திடீர் சந்திப்பு…வைரலாகும் போட்டோ..ஃபேன்ஸ் செயலால் குழம்பி போன நெட்டிசன்கள்.

நடிகர் ரஜினிகாந் – அஜித் சந்திப்பு நிகழ்ந்துளளதாக வெளியான புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர், நடிகர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். ரஜினிகாந்த் 70 வயதிலும் ஆக்ஷன் காட்சிளிலும் பிஸ்னஸிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. தற்போது, ரஜினிகாந் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்கிறார்.ஷூட்டிங் பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தில், தன்னுடைய சம்பளத்தை ரஜினி உயர்த்தி ரூ 150 கோடி கேட்டுள்ளார். இதன் மூலம், இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக ரஜினி தான் முதல் இடத்தில் உள்ளார்.

அதேபோன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித், தற்போது மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ‘ஏகே61’ என்ற படத்தில் . தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.ஏகே61’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வைத்து அவரை சந்தித்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோ ரஜினியின் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் அஜித்தின் ரசிகர்கள் பார்த்த செயல் என்று கூறுகின்றனர். இந்த புகைப்படம் பார்த்து நெட்டிசன்கள், குழம்பி போய் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
