BREAKING NEWS

அஜித் 61 படம் பற்றி அசத்தல் அப்டேட்!

அஜித் 61 படம் பற்றி அசத்தல் அப்டேட்!

அஜித்குமார் நடிக்கும் படம் பற்றிய அடுத்த அப்டேட் தெரிய வந்திருக்கிறது.

`வலிமை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்குமார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. AK 61 என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் அஜித் கெட்டப் புகைப்படத்தைத் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டிருந்தார். அதில் வெள்ளை தாடியுடனும் காதில் கடுக்கனுடனும் ஸ்டைலாக இருந்தார் அஜித். இந்தப் புகைப்படம் அப்போது வைரலானது.

இதில் அவர் நெகட்டிவ் வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ஜான் கொக்கென், சமுத்திரக்கனி, யோகிபாபு, மகாநதி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அஜித் ஜோடியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

படத்துக்காக, வங்கி மற்றும் சென்னை மவுண்ட் ரோட் செட் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இந்த ஷெட்யூல் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. அடுத்து இதன் படப்பிடிப்பு புணேவில் நடக்க இருக்கிறது. அதை முடித்தபின், சென்னையில் சில காட்சிகளை படமாக்க உள்ளனர். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )