அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் கும்பகோணத்தில் எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரத்தை அதானி குழுமத்தின் நிறுவ னங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரியும், அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கி னார். மேயர் சரவணன், மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் மிர்ஷாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பேச்சாளர் நெல்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், பாலதண்டாயுதம், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்நாதன், மனித உரிமைகள் பிரிவு நிர்வாகி சுபா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS AdaniSBIஅதானிஅரசியல்இந்திய காங்கிரஸ் கட்சிகும்பகோணம்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி