BREAKING NEWS

அமேசான் ப்ரைமின் புதிய திட்டத்தில் `கே.ஜி.எஃப் 2’

அமேசான் ப்ரைமின் புதிய திட்டத்தில் `கே.ஜி.எஃப் 2’

கே.ஜி.எஃப்-2 படத்தின் இரண்டாம் நாள் வசூலை வெளியிட்ட படக்குழு || Tamil  cinema kgf2 movie second day profit announced by movie team

யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படம் அமேசான் பிரைமின் புதிய திட்டத்தின்படி வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் ‘கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் கடந்த 14-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ரிலீஸ் ஆன நாளில் இருந்தே வசூலைக் குவித்து வரும் இந்தப் படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், இந்தப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைமில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி இதைப் பார்க்கலாம்.

அமேசான் சந்தாதாரராக இருந்தாலும் இந்தப் படத்தை ரூ.199 செலுத்தினால்தான் பார்க்க முடியும். தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருப்பதால் பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையை அமேசான் கொண்டு வந்துள்ளது. சில நாட்கள் கழித்து இலவசமாகப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சந்தாதாரர்களாக இருப்பவர்களும் கட்டணம் செலுத்திப் பார்க்க வேண்டும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )