அரசியல்
ஆர்ஜே சித்ரா தற்கொலையில் அதிமுகவினருக்கு தொடர்பாக?- ஜெயக்குமார் பதில்.

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 6-வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கிழக்கு கடற்கரை சாலை என்பது அழகான பெயர், காஷ்மீரில் இருக்கக்கூடியவர்களை கேட்டால் கூட தெரியும். இந்த பரீட்சையமான சாலைக்கு பெயர் மாற்றி இருப்பதை பொதுமக்களே விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றம் செய்து விடுவார்கள்.
ஓபிஎஸ்சின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் ஆன்மிக அடிப்படையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அரசியல் தொடர்பு இல்லை என அவரே மறுத்துவிட்டார். சமூக வலைதளங்களில் வந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். தற்பொழுது தமிழகத்தின் நிழல் முதல்வராக மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் இருந்து வருகின்றனர். உதயநிதிக்கு பெரிய பதவியை வழங்குவதற்காக அவரை முன்னிலைப்படுத்தும் விதமாக முன்னேற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
