BREAKING NEWS

அரசு பஸ்டிரைவருக்கு 5 ஆண்டு சிறை.

அரசு பஸ்டிரைவருக்கு 5 ஆண்டு சிறை.

உடுமலை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கிலி யப்பன் ஐயப்பன் (57) அரசுப் போக்குவரத்துக் கழக உடுமலை கிளையில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் இவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்தார் இதையடுத்து அவரை உடுமலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட சங்கிலி அப்பனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமிலா பானு ஆஜரானார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )