BREAKING NEWS

ஆடிப்பெருக்கை பண்டிகை முன்னிட்டு கலை கட்டிய வேப்பூர் ஆட்டு சந்தை 7கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம்

 

ஆடிப்பெருக்கை பண்டிகை முன்னிட்டு கலை கட்டிய வேப்பூர் ஆட்டு சந்தை 7கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம்

பகல் நேரத்தில் நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தை இம்முறை வழக்கத்திற்கு நேற்று நேற்று மாலை 4மணியிலிருந்து மாறாக இரவு முழுவதும் விற்பனை

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் வருகின்ற சனிக்கிழமை ஆடிப்பெருக்கு முன்னிட்டு

நேற்று மாலை 4 மணியில் இருந்து அதிகாலை 6:00 மணி வரை பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சேலம் தேனி திண்டுக்கல் பெரம்பலூர் ஆத்தூர் விழுப்புரம் என பல்வேறு மாவட்டத்திலிருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் போட்டி போட்டுக் கொண்டு விற்பனை செய்தனர்

சந்தையில் 40 ஆயிரம் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது இதில் வெள்ளாடு குறும்பாடு கொடியாடு மாலாடு என பல்வேறு வகையான ஆடுகள் ரூபாய் ஐயாயிரம் முதல் 37,000 வரை விற்பனை போனதாகவும் கூறப்படுகிறது

வழக்கமாக பகல் நேரத்தில் நடைபெற நடைபெறும் இந்த ஆட்டு சந்தையில் இம்முறை இரவு முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது மொத்தமாக 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS