BREAKING NEWS

இந்தியா கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குதஞ்சை பாராளுமன்றத் தொகுதி திமுக எம்.பி.முரசொலி நன்றி தெரிவிப்பு.

இந்தியா கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குதஞ்சை பாராளுமன்றத் தொகுதி திமுக எம்.பி.முரசொலி நன்றி தெரிவிப்பு.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தஞ்சை பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. முரசொலி சந்தித்து நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக கட்சி சார்பில் தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் முரசொலி என்பவர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு காரணமாக இருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்கும் பணியை திமுக எம்.பி. முரசொலி தொடங்கியுள்ளார். அதன்படி இந்தியா கூட்டனியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வு தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

திமுக எம்.பி. முரசொலி கூறியதாவது:    நான் வெற்றிப்பெற்ற பிறகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து ஆசிர்வாதம் பெற்றேன்.
அடுத்தபடியாக இந்தியா கூட்டனியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தேன். கூட்டணி கட்சி தலைவர்களில் நன்றி தெரிவிப்பதற்காக, நான் முதன் முதலில் சந்தித்த தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. என்பதில் நான் பெருமை அடைகிறேன். அவரை நான் முதன் முதலில் சந்தித்து எனது வெற்றிக்கு காரணமாக இருந்த உங்களுக்கும் உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் என்று கூறினேன். அது என்னால் மறக்க முடியாத தருணம்.

நான் தேர்தலில் நிற்கும்போது தலைவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கூறியது என்னவென்றால்,
நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள். உங்களுக்காக எங்கள் தோழர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று தலைவர் கூறினார். அதன்படி நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்திருக்கிறீர்கள். இதை எப்போதும் நான் மறக்க மாட்டேன். உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று திமுக எம்.பி. முரசொலி கூறினார்.

CATEGORIES
TAGS