இரும்புலிகுறிச்சியில் தேமுதிக -வினர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு

அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியம் சார்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செந்துறை ஒன்றியம் வெண்ணைக்குறிச்சி,வடக்கு மற்றும் தெற்கு இரும்பிளிக்குறிச்சியில் கொடி ஏற்றி அன்னதானம் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்,சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் கலந்துகொண்டு கட்சிக்கொடி ஏற்றி இனிப்புகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து உஞ்சினி,கீழ ராயம்புரம் ஊராட்சிகளிலும் கொடி ஏற்றபட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சேகர் மாவட்ட ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், சரவணன் செந்தில் ஆரோக்கியராஜ்,மாவட்ட துணை செயலாளர் ரவி,கிருஷ்ணமூர்த்தி, சாமி. தங்கராசு, சேட்டு, திருசங்கு பெரியசாமி, முருகேசன் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் செய்தியாளர் D வேல்முருகன்