இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் இவர் தண்ணீர்குளம் திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி சிபிஎஸ்இ பள்ளி அருகில் 12 அடி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அதனை தயாளன் பார்வையிட்டுக் கொண்டு இருந்தனர்,
அப்போது தண்ணீர்குளம் ஊராட்சி கணபதி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் (42) என்பவர் தனது ஆட்டோவை வீட்டிலிருந்து சாலையில் ஏறி செல்வதற்காக சாலையை சரிவாக அமைக்கும் படி கேட்டுள்ளார். அப்போது ஊராட்சி தலைவரின் கணவர் தயாளன் அப்படியெல்லாம் செய்ய முடியாது என கூறியதாக தெரியவருகிறது , இதனால்
இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் ஆத்திரமடைந்த மகாலிங்கம் தயாளனின் இடது புற காதை கடித்ததில் காது தனியாக வந்துள்ளது,
உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,
இது குறித்து ஊராட்சி தலவைர் தேவிகாவின் மகன் தியாகு செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் காதை கடித்து தனியாக எடுத்த மகாலிங்கம் மற்றும் அவரது தந்தை மாரி ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.