BREAKING NEWS

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!

திட்டுவிளை மார்த்தால் அசிசி பள்ளி வளாகத்தில் ஜாய் பவுண்டேஷன் மற்றும் கால்வின் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் சுமார் 170 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். 8 நபர்கள் கண் புரை நீக்குதல் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு முற்றிலும் இலவச சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

19 பேருக்கு எக்கோ எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கால்வின் மருத்துவமனை மருத்துவர்கள் கால்வின் டேவிட் சிங், டாக்டர் . கீதாஞ்சலி மற்றும் டாக்டர் . பினுலா கிறிஸ்டி மற்றும் அசிசி பள்ளி முதல்வர் ஜூலியட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மார்த்தால் பூதப்பாண்டி பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் மரிய அற்புதம் மற்றும் ஜாய் அறக்கட்டளை நிர்வாகிகள் எம் .ஆஸ்டின் பெனட் நாகராஜன், பாஸ்டர் ஐசக், மனோன்மணி ஐசக், ஆட்ரிக் ஆகியோர் செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS