BREAKING NEWS

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை , மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெறும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு “உங்களைத் தேடி; உங்கள் ஊரில்” திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் ஊராட்சியாக பண்டாரவாடை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அவர் ஆய்வு செய்தார். அப்போது வெளிச்சம் இல்லாத அறையில் அமர்ந்து படிப்பதை கண்டு அங்கு மின்விளக்கு எரியவிட உத்தரவிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், மதிய உணவு உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாணவர்களை படிக்கச் சொல்லி அவர்களது கற்றல் திறனை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் ஆங்கில பாடத்தை வாசிக்க திணறியதை தொடர்ந்து மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வாசிக்கக் கூட கற்றுத் தரவில்லையா? என பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார்.

மேலும் பண்டாரவாடை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, வடிகால் வாய்க்கால் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களுக்கு மாடு வாங்க கடனுதவி வழங்குவதுடன், ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Share this…

CATEGORIES
TAGS