BREAKING NEWS

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு ஊர்வலமாக சென்றனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய அந்தரேயர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியர் சிந்தியா தலைமையில் நடைபெற்றது

இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சைக்கொடி அசைத்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையம் வரை சென்று பின்னர் மார்க்கெட் வழியாக பள்ளிக்கு வந்தடைந்தது.
ஊர்வலத்தில் நெகிழி ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

இதில் மூத்த ஆசிரியர் பீட்டர் அற்புதராஜ் , தேசிய மாணவர் விமானப்படை பிரிவு பொறுப்பு ஆசிரியர் ராஜா , சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பு ஆசிரியர் திருமதி அருணா மொழி அரசி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS