உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோகிராபிக்ஸ் நல சங்க விழா
உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோகிராபிக்ஸ் நல சங்க விழா
அரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோ
கிராபிக்ஸ் நல சங்கத்தின் சார்பாக 185 வது உலகப் புகைப்பட தின விழா செந்துறையில் கொண்டாடப்பட்டது
விழாவில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா அவர்களும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு ஆணையர் செல்வராஜ் அவர்களும் செந்துறை வட்டார வளர்ச்சி ஆணையர் ஜாகிர் உசேன் மற்றும் அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு அரியலூர் மாவட்டத்தின் பெருமை சேர்க்கும் வகையில் சதுரங்க போட்டியில் பல நாடுகளுக்குச் சென்று தங்கம் மெடல் வெற்றி பெற்ற சர்வாணிக்கா அவர்களுக்கும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கமடல் பெற்ற லட்சுமி தரன் அவர்களுக்கும் நினைவு பரிசு கோப்பை வழங்கினார்கள்
அதோடு அரியலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சின்னப்பா அவர்கள் போட்டோ மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு விரைவில் நல வாரிய சங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்
மாவட்டக் கண்காணிப்பாளர் அவர்கள் ஒவ்வொரு புகைப்படத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சியோடு புகையிலை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக் கண்காணிப்பாளரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்
அதனோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் செந்துறை காவல் நிலையம் மற்றும் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
இச்செயலுக்கு பொதுமக்கள் அரியலூர் மாவட்ட போட்டோ வீடியோ கிராஃபர்ஸ் நல சங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்