ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மிகவும் பழமையான, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு 30-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன், சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகாலட்சுமி, கருமாரி, சரஸ்வதி, கம்பாநதி, கர்ப்பிணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 9ம் நாள் விழா திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் நகர மன்ற தலைவரும் கோயில் தர்மகத்தாவுமான பூவை எம்.ஞானம் மற்றும் கழக மருத்துவர் அணி நிர்வாகி ஞா.பிரேம்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.
விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பூவை எம். ஞானம், நிர்மலா ஞானம், முன்னால் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான பா. பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது.
இந்தவிழாவில் பக்தி பாடல்கள்,ஆடல் பாடல், இன்னிசை கச்சேரி, மேளதாளம், நாதஸ்வரம், பறை இசை, சென்டை மேளம், இசைக்கச்சேரி, கரகாட்டம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த திருவிழாவை காண பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர், ஐயப்பன்தாங்கல், வேலப்பன்சாவடி, திருவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் ஐயாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர்.