ஐடிஐ மாணவனை இருவர் தாக்கும் வீடியோ வைரல், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
whatsapp வீடியோவில் தொடர்பில் இருக்கும் நபரிடம் மன்னிப்பு கேட்க வைத்து தொடர்ந்து சீருடை அணிந்த ஐடிஐ மாணவனை இருவர் தாக்கும் வீடியோ வைரல், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுரநாதர் மேல வீதியில் அமைந்துள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஒரு மாணவனை கடுமையாக தாக்கி அவமானப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு மாணவனை தொடர்ந்து மற்றொரு மாணவன் விதவிதமான போஸ்களில் தாக்குவதும், whatsapp வீடியோ காலில் தொடர்பில் உள்ள நபரிடம் சிங்கம் இது போதுமா என்று கேட்டுவிட்டு எனக்கு இது போதாது என்று சொல்லி whatsapp வீடியோ காலில் மன்னிப்பு கேட்க சொல்வதும் மேலும் மேலும் அடித்து துன்பப்படுத்துவதும் சமூக ஆர்வலர்களை கொதிப்படைய செய்துள்ளது. படிக்கும் காலத்திலேயே ரவுடி போல் நடந்து கொள்ளும் இத்தகைய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்று காவல் துறை கை விரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.