ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியியை சேர்ந்த 12 மாணவர்கள், ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 12 மாணவர்கள் கொண்ட குழுவினர், ஐரோப்பா நாட்டில் மொனாக்கோ என்ற பகுதியில், நடைபெறும் எனர்ஜி படகு சவால் 2024, எனும் போட்டியில் பங்கேற்க, இந்திய நாட்டிலேயே முதன்முறையாக பேட்டரி கொண்டு இயங்கும் படகை வடிவமைத்துள்ளனர், டீம் சீ சக்தி என்ற குழுவை சேர்ந்ந 12 மாணவர்கள் வடிவமைத்துள்ள இந்த படகு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று பந்தயசாலை பகுதியில் நடைபெற்றது. இதனை தொடர்த்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டீம் சீ சக்தி குழுவை சார்ந்த மாணவி ஹெமலதா கூறுகையில்…
குமரகுரு கல்லூரியை சார்ந்த மாணவர்கள் 12 பேர் கொண்ட குழு, டீம் சீ சக்தி, எனும் தலைப்பில் யாழி 3.0 எனும் எனர்ஜி படகை வடிவமைத்துள்ளதாகவும், இதன் நோக்கம் ஐரோப்பா நாட்டில் உள்ள மொனாக்கோ பகுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக இந்த ஆண்டும் தங்களை தயார் படுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து கலந்து கொள்ளும் ஒரே அணியாக உள்ளது என்றார். இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதற்காக கடந்த ஆண்டை விட, பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த படகை வடிவமைத்து அதனை உருவாக்கி உள்ளதாகவும், இரட்டை உந்து விசை அமைப்புடன் வடிவமைக்க பட்ட இந்த யாழி காந்த உந்துவிசையை தேர்வு செய்துள்ளது. இது படகில் நீர் கசிவு காரணமாக ஏற்படும் ஆற்றல் இழப்பை நீக்குகிறது, என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.