BREAKING NEWS

ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஜவளகிரி வனத்துறையினர் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி கர்நாடகா – தமிழக மாநில வனப்பகுதி எல்லையை கொண்ட அடர்வனப்பகுதியாக உள்ளநிலையில்

இப்பகுதியில் தான் காவிரி ஆற்று படுகை அமைந்து, 50 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் நிரந்தரமாக வசித்து வருகின்றன..

யானைகள் இருமாநிலத்திற்கும் யானைகள் கடந்து செல்லும் முக்கிய வழிதடமாக ஜவளகிரி வனப்பகுதி உள்ளநிலையில்

நேற்றிரவு ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வலம் வந்த 35 வயது மதிக்கதக்க ஆண் காட்டுயானை ஒன்று பாலதோட்டனப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டுக்குள்ளாக நுழைந்தபோது அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்கம்பிகள் தாழ்வாக மின்வேலிக்கு அருகிலேயே அமைத்திருந்ததால் மின்கம்பி பலமாக உரசியதில் காட்டுயானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது..

இதுக்குறித்து ஜவளகிரி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS