BREAKING NEWS

ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆன வாக்களிப்பதை கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்ற வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் திருமதி கே எம் சரயு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர் தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த பேரணியானது.

மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இருந்து துவங்கி நேதாஜி சாலை, தாலுக்கா அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்தது.

அப்பொழுது வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் பிரச்சனைகளை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு பேரணி ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை வந்து அடைந்தது.

Share this…

CATEGORIES
TAGS