BREAKING NEWS

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நான்காவது நாளாக குவியல் குவியலாக நுரை: தூர்நாற்றம் வீசும் நுரையில் விளையாடி செல்பி எடுக்கும் பொதுமக்கள்

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நான்காவது நாளாக குவியல் குவியலாக நுரை: தூர்நாற்றம் வீசும் நுரையில் விளையாடி செல்பி எடுக்கும் பொதுமக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தொடர்ந்து நான்காவது நாளாக 400 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது..

நீரில் கலக்கப்பட்ட ரசயான கழிவுகள் காரணமாக ஆற்றில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி துர்நாற்றத்துடன் காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்..

கருநிறத்தில் வெளியேறும் நீரில் 2 அடி உயரத்திற்கு நுரைப்பொங்கி மேகங்களை போல நகர்ந்து வருகிறது..

கருநிறத்தில் நாற்றமடிக்கும் நீரில் நுரைப்பொங்கி செல்வதை வாகன ஓட்டிகள் நோய்பரவும் அபாயத்தை உணராமல் விளையாடியும் செல்பி எடுத்து வருகின்றனர்..

அணையிலிருந்து வெளியேறும் நீர் பாட்டிலில் பிடித்தபோது கருப்பு மை நீறில் கலந்தது போன்று கருநிறத்தில் காட்சியளிப்பது அச்சத்தை உண்டாக்குகிறது..

தென்பெண்ணை ஆற்று நீர், மாசடைவது குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கர்நாடகா – தமிழகம் இருமாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நீர் மாதிரிகளை சேமித்து சென்றபோதும் இதுவரை அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

CATEGORIES
TAGS