BREAKING NEWS

ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை

ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் இராமச்சந்திர ரெட்டி இவர் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கறவை மாடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகிறார்..

நேற்றிரவு டாடா ஏஸ் வாகனத்தில் வந்த மர்மநபர்கள், ராமச்சந்திரா ரெட்டி என்பவரது பசுமாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு

அருகே உள்ள சாரக்கப்பள்ளி என்னும் கிராமத்தில் பாபு என்பவரது மாட்டினை திருட முயன்றபோது, நாய்கள் அதிகஅளவில் குறைத்ததால் விழித்துக்கொண்ட பாபு வெளியே பார்த்தபோது தனது மாட்டினை இருவர் ஓட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார்..

பாபுவின் சத்தம் கேட்டு திருடர்கள் மாடுகளை விட்டு டாடா ஏஸ் வாகனத்தில் தப்பியோடி உள்ளனர்.. பாபுவும் டாடா ஏஸ் வாகனத்தை காரில் பின்தொடர்ந்து சென்று ஒருவழி சாலையில் வாகனம் செல்லாதவாறு குறுக்கே நிறுத்தியதாகவும்

ரிவர்சில் சென்ற டாடா ஏஸ் வாகனத்தை பாபுவின் மகன் டிராக்டர் கொண்டு சாலையை அடைத்து விட உஷாரான திருடர்கள் மாடுகள், டாடா ஏஸ் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்..

இதுக்குறித்து தளி போலிசாருக்கு கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் போலிசார் வாகனத்தை பரிசோதித்தபோது கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்திலிருந்து திருடிவந்த டாடா ஏஸ் வாகனம் என்பதும் அதில் 2 வீச்சரிவாள், கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான மாடுகள் திருடப்பட்டிருப்பதாகவும் இந்த திருட்டு சம்பவத்தை இந்த கும்பல் தான் அரங்கேற்றியதா அல்லது இன்னும் இதுப்போன்ற திருடர்கள் சுற்றிவருகிறார்களா என அச்சம் தெரிவித்தனர்.வாகனத்தை கைப்பற்றி தளி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS