BREAKING NEWS

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை : மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவும் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பகல் நேரங்களில் தொடர்ந்து சுட்டெரித்து வந்த கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக, இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு சிலர் பகுதிகளில், பால், காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கிரேடுகள் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மழை நீரில் அடித்து செல்லப்பட்டன.மேலும் கனமழை காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.

Share this…

CATEGORIES
TAGS