கடலூர் அருகே 3 டன் ரேஷன் அரிசி கடத்தல்.! டிரைவர் தப்பி ஓட்டம்; ஏஜென்ட் சிக்கினார்.

– கடலூர் மாவட்ட செய்தியாளர் – கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கழுதூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அவ்வழியே ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, TN 50 BZ 5474 என்ற பதிவெண் கொண்ட மகேந்திரா பிக்கப் வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் ரேசன் அரிசியையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்பு திட்டக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து, மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும்,
கடத்தலுக்கு ஏஜென்டாக செயல்பட்ட பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரையும் வேப்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட வாகன ஓட்டுனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.