BREAKING NEWS

கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில் எடுக்க விடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயிலை எடுக்க விடாமல் மறித்து விவசாயிகள் போராட்டம்.

கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில் எடுக்க விடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயிலை எடுக்க விடாமல் மறித்து விவசாயிகள் போராட்டம்.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக போராட்டம் அறிவித்திருந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் ரயிலில் வாரணாசிக்கு 120 விவசாயிகள் வேர்ப்பு மனு தாக்கல் செய்வதற்காக முன்பதிவு செய்து சென்ற நிலையில் விவசாயிகளை திடீரென டிக்கெட் இல்லை எனக் கூறி காத்திருப்பு பட்டியலில் வைத்துவிட்டு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனவும் இருக்கைகள் இல்லை எனக் கூறியதாக கூறி தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை எடுக்க விடாமல் ரயில் பெட்டியின் செயினை இழுத்து ரயிலை நிறுத்திய விவசாயிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயிலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உறுதி செய்யப்பட்ட பயண சீட்டை ரத்து செய்து விட்டதாகவும், ரயில் பெட்டியில் தண்ணீர் வரவில்லை என குற்றம் சாட்டியும் அய்யாக்கண்ணு தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கன்னியாகுமரி பனாரஸ் ரயிலை மறித்து இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தியதால் தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்

தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 120 விவசாயிகள் திருச்சியில் இருந்து வாரணாசிக்கு செல்கின்றனர்

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து அய்யாக்கண்ணு போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.இதற்காக திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் வாரணாசி செல்கின்றனர்.இதற்காக 120 விவசாயிகள் வாரணாசி செல்ல ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் 40 பேருக்கு முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்டதாகவும் மீதமுள்ள 80 பேருக்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் முன் பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 40 பேருடைய டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாக கூறி டிக்கெட் பரிசோதகர் அவர்களை கீழே இறங்க சொன்னதாக சொல்லப்படுகிறது.

மேலும் ரயில் பெட்டியில் தண்ணீர் வரவில்லை என சொல்லப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில் தஞ்சை ரயில் நிலையத்தை அடைந்த போது ரயிலை மறித்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகளின் போராட்டத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அதே ரயிலில் பயணம் செய்தனர்.சுமார் இரண்டு மணி நேரம் விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பயணிகள் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி இருக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்

Share this…

CATEGORIES
TAGS