காட்டன் சூதாட்டம் எனப்படும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த இருவர் கைது!

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோத காட்டன் சூதாட்டத்தைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கீ.வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் சட்டவிரோதமாக காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் கீ.வ.குப்பம் வட்ட காவல் ஆய்வாளர் நிர்மலா மற்றும் கீ.வ.குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மூன்று நெம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்த குடியாத்தம் வாஜித் நகர் பகுதியைச் சேர்ந்த அனிஷ் மகன் முகமது வசி(28),குடியாத்தம் செருவங்கி பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் குமரவேல் (38)ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 200/- ரூபாய் பணம் மற்றும் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
