BREAKING NEWS

காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ கணபதி பூஜை, மஹா லஷ்மி நவக்கிரக ஹோமங்கள், தன பூஜை,
கோபூஜை, விஷேச திரவ்ய ஹோமம், ஆகியவைகள் நடைபெற்றன

தொடர்ந்து மங்கள இசை, இரண்டாம் கால யாகசாலை பூஜை ஹோமம், நாடிசந்தானம் தத்வர்ச்சனை, ஸ்பரியசாஷித், மஹா சங்ககல்பம் ஷஷேசதிரவ்ய ஹோமங்கல், மஹா பூர்ணாஹிதி, யாத்ராதனம் ஆகியவை நடைபெற்றது

இதனை தொடர்ந்து புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் விசேஷ பூஜைகளுக்கு பிறகு கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

CATEGORIES
TAGS