BREAKING NEWS

காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக லத்தேரி விநாயகர் கோயிலில் அம்மன் சிரசு பூஜை வழிபாடு செய்து  கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சிலம்பாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கொக்கலி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மேளதாளம் முழங்க அம்மன் சிரசு பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது அப்பொழுது பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி தேங்காய்கள் உடைத்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்

பக்தர் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்த அம்மன் சிரசு கோவிலில் உள்ள சன்டாலாட்சி உடலில் ஏற்றப்பட்டது  

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கூழ்வார்த்தல், பொங்கல் வைத்து, மாவிளக்குவைத்து வழிபட்டனர்

அதனைத் தொடர்ந்து கண் கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது . உள்ளூர் மற்றும் வெளியில் சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்

தொடர்ந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்தனர்.

CATEGORIES