கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில அரசியல் குழு செயலாளர் நீல வானத்து நிலவனின் மகனும் திமுகவில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியுமான பிரதீப் அசோக்குமார் 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் பொதுச் செயலாளர் நீல வானத்து நிலவன் மகனும் திமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளமான பிரதீப் அசோக்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மணிமாறன் என்பவரை 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான கலைச்செல்வி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார் இதை தொடர்ந்து பிரதீப் அசோக் குமாரின் மனைவியும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான கலையரசி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழுச் செயலாளர் நீல வானத்து நிலவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி செஞ்சிசெல்வம் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணித்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
