BREAKING NEWS

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!

முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ .பத்மநாபன் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்று பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.
முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தங்க செல்வம், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், சோனா, மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சண்டே கிரிக்கெட் கிளப் நிர்வாகி பிரகாஷ் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ. பத்மநாபன் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், சின்னவர் உதயநிதி மன்ற தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

போட்டியில் மணிமுத்தாறு போலீஸ் அணி முதல் பரிசை வென்றது. அவர்களுக்கு ரூபாய் பத்தாயிரமும், கோப்பையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது இடத்தை சண்டே கிரிக்கெட் கிளப் பணி பெற்றது. அவர்களுக்கு கோப்பையும், ரூபாய் 8000 மும் வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்தை ஆலங்குளம் ஏசிசி அணி வெற்றி பெற்றது. அவர்களுக்கு ரூபாய் 5000, கோப்பையும் வழங்கப்பட்டது .
நான்காவது இடத்தை குருவங்கோட்டையைச் சேர்ந்த மினி குருவை அணி பெற்றது. அவர்களுக்கு ரூபாய் 3000, கோப்பையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஐந்தாவது இடத்தை பஞ்சாப் என்சிசி அணி பெற்று வெற்றி பெற்றது. அவர்களுக்கு ரூபாய் 3000 ,கோப்பையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS