BREAKING NEWS

கீழக்கரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

கீழக்கரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த வருடமும் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 19ல் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்க இருப்பதால் அனைத்து மாநிலங்களிலிருந்து மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருவது தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவிழாவில் பயன்படுத்தும் ராட்டினங்களில் முறையாக ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும் யாத்திரைகளுக்கு கழிப்பறை வசதிகள் குடிதண்ணீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் கூடுதலான போக்குவரத்து அமைத்துக் கொடுக்க வேண்டும் குப்பைகளை அகற்ற வேண்டும் தடை செய்யப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது..

தர்கா கமிட்டி நிர்வாகிகள் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஊராட்சி அதிகாரிகள் போலிஸ் அதிகாரிகள் உட்பட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்..

Share this…

CATEGORIES
TAGS