BREAKING NEWS

குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கோலாகலம்!

குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். இன்னர் வீல் முன்னாள் தலைவி ஆயிஷா, முன்னாள் நகர மன்ற தலைவர் புவியரசி, இன்னர் வீல் செல்வகுமாரி, முன்னாள் இன்னர் வீல் தலைவர் கீதா லட்சுமி குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், நகர மன்ற உறுப்பினர் தீபிகா தயாளன், நகர மன்ற உறுப்பினர் நவீன் சங்கர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை புலவர் இராசி.தலித் குமார் ஒருங்கிணைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி மோகன், சுந்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் நிர்மலா கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். கலை நிகழ்ச்சிகளை ஷெர்லி ஜான், ஆசிரியை செல்வி காயத்ரி ஏற்பாடு செய்திருந்தனர் .ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர் தயாளன், வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, வட்டார கல்வி அலுவலர் கண்ணன், வட்டார கல்வி அலுவலர் அருள் லிங்கம் ,எஸ். எஸ். ஏ. மேற்பார்வையாளர் வெண்ணிலா, ஆசிரியப் பயிற்றுநர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS